‘விளையாட்டு அழகான வாழ்க்கையை வழங்குகிறது’ - சென்னையில் மனு பாகர் உற்சாகம்

சென்னை: சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாகர் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே பதிப்பில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்றபெருமையையும் அவர், பெற்றிருந்தார். சரித்திர சாதனை படைத்த மனு பாகருக்கு சென்னை நொளம்பூரில் வேலம்மாள் நெக் சஸ் பள்ளி சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

செண்டை மேளம் முழங்க விழா நடைபெற்ற இடத்துக்கு மனு பாகர் அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு கிரீடம் மற்றும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த 642 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.07 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து ‘வேலம்மாள் விஷன் ஃபார் ஒலிம்பிக் மெடல் 2032’ திட்டத்தையும் மனு பாகர் தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.