வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: சைம் அயூப், சவுத் சகீல் அரை சதம்
ராவல்பிண்டி: பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. மழைகாரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 16 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அஸம் 0 ரன்களில் நடையை கட்டினர்.
4-வது விக்கெட்டுக்கு சைம் அயூப்புடன் இணைந்த சவுத் சகீல் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். 110 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியைஹசன் மஹ்மூத் பிரித்தார். சைம் அயூப் 98 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
