இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இலங்கை அணி தடுமாற்றம்
மான்செஸ்டர்: இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. நிஷான் மதுஷ்கா 4, திமுத் கருணாரத்னே 2, குஷால் மெண்டிஸ் 24, ஏஞ்சலோ மேத்யூஸ் 0, தினேஷ் சந்திமால் 17, கமிந்து மெண்டிஸ் 12, பிரபாத் ஜெயசூர்யா 10 ரன்களில் நடையை கட்டினர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் சீராக ரன்கள் சேர்த்த கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 84 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசிய நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் ஆட்டமிழந்தார். தேனீர் இடைவேளையில் இலங்கை அணி 52 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
