100 கிராமில் கலைந்த கனவு: வினேஷ் போகத் எடை அதிகரித்தது எப்படி?
மல்யுத்தம், குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பவர்கள் எடை பரிசோதனைக்கு முன்னர் பொதுவாகவே உணவு மற்றும் தண்ணீரை அருந்துவதில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பார்கள். மேலும் நீராவி குளியலும் எடுத்துக் கொள்வார்கள். எடை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த முயற்சிகளால் உடல் பலவீனம் அடையும். இழந்த ஆற்றலை மீட்டெடுக்கும் விதமாக எடை பரிசோதனை முடிவடைந்ததும் குறைந்த அளவிலான தண்ணீரை போட்டியாளர்கள் பருகுவார்கள். அதேவேளையில் அதிக ஆற்றல் கொண்ட உணவை எடுத்துக் கொள்வார்கள். அப்போதுதான் போட்டியின் போது வலுவாக செயல்பட முடியும்.
இந்த வகையிலேயே வினேஷ் போகத் உணவைஎடுத்துக் கொண்டுள்ளார். அரை இறுதி ஆட்டம் முடிவடைந்ததும் வினேஷ் போகத்தின் உடல் எடை அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர், எடுத்துக் கொண்ட உணவால் அவரது எடை 1.5 கிலோ வரை அதிகரித்திருக்கக் கூடும் என ஊட்டச்சத்து நிபுணர் கணக்கிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து வினேஷ் போகத் உடல் எடையைகுறைப்பதற்காக விடிய விடிய உடற்பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். சைக்கிளிங், கடின பயிற்சிகள் மூலம்வியர்வை வழியாக உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைப்பது என பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். ஆனால் கடைசியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

