பங்களாதேஷில் நிலவும் பதற்றமான அரசியல் சூழல்; திட்டமிட்டபடி நடக்குமா டி20 மகளிர் உலகக் கோப்பை?
பங்களாதேஷில் நிலவும் பதற்றமான அரசியல் சூழலால் அங்கு நடக்கவிருந்த மகளிர் கிரிக்கெட்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் ஆளும் அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்து பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால் அந்நாட்டின் பிரதமரான ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார். இதையடுத்து ராணுவம் பொறுப்பேற்று இடைக்கால ஆட்சி அமைப்பது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் பங்களாதேஷில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. ஆனால் தற்போது அங்கு நிலவிவரும் பதற்றமான அரசியல் சூழலால் மகளிர் கிரிக்கெட்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் அங்கு நடக்குமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

பங்களாதேஷின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கவனித்து வருவதாகவும் போட்டிகளை இந்தியாவுக்கு மாற்றுவது தொடர்பாக ஐசிசி யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் சில தினங்களில் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

