“இந்திய ஹாக்கி அணி வெற்றியை பார்த்து கண்ணீரை அடக்க முடியவில்லை” - தன்ராஜ் பிள்ளை உருக்கம்

இந்தியாவின் முன்னாள் டாப் நட்சத்திர ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை கிரேட் பிரிட்டனுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி குறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதோடு ஸ்ரீஜேஷின் தடுப்புகளைப் பார்த்து ஆனந்த கண்ணீர் பெருகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிடிஐ-யிடம் தன்ராஜ் பிள்ளை கூறியதாவது: "என்னால் பெருகிய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஆண்டுகளாக இது போன்ற ஒரு ஹாக்கி ஆட்டத்தை இந்திய அணியிடமிருந்து நான் பார்க்கவில்லை. இப்போது எனக்கு நம்பிக்கைப் பிறந்துள்ளது. 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இந்திய அணி தங்கப்பதக்கத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.