வெண்கலப் பதக்கப் போட்டியில் லக்ஷயா சென் போராடி தோல்வி
பாரிஸ்: ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் இந்தியாவின் லக்‌ஷயா சென் பலப்பரீட்சை மேற்கொண்டார். இதில் 1-2 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென் போராடி தோல்வியை தழுவினார்.
இந்தப் போட்டியை பார்க்க இந்தியா மற்றும் மலேசியா நாடுகளின் பார்வையாளர்கள் அதிகளவில் குழுமியிருந்தனர். அதன் காரணமாக இருவருக்கும் சமமான ஆதரவு இருந்தது. முதல் செட்டில் தொடக்கம் முதலே லக்‌ஷயா சென் முன்னிலையில் இருந்தார். அதன் பலனாக முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் முதல் சில நிமிடங்கள் 2-2 என ஆட்டம் சமனில் இருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

