ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!

பாரிஸ்: ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளது மணிகா பத்ரா, அர்ச்சனா காமத் மற்றும் ஸ்ரீஜா அகுலா அடங்கிய இந்திய மகளிர் அணி. ருமேனியா அணியை 3-2 என்ற கணக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியா வீழ்த்தியது.

முதலில் தொடங்கிய இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அர்ச்சனா காமத் மற்றும் ஸ்ரீஜா வெற்றி பெற்றனர். தொடர்ந்து தனித்து ஆடிய மணிகா பத்ரா வெற்றி பெற்றார். இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை வகித்தது. இருந்தும் ஸ்ரீஜா மற்றும் அர்ச்சனா அடுத்தடுத்து ஆடிய ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வியை தழுவினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.