`காதலருடன் ஊர் சுற்றச் சென்ற ஒலிம்பிக் வீராங்கனை! - போட்டியில் இருந்து நீக்கிய பிரேசில் நிர்வாகம்

ஒலிம்பிக் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து காதலனுடன் வெளியேறி ரகசியமாக ஊர் சுற்றுவதற்குச் சென்ற பிரபல நீச்சல் வீராங்கனை ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

33 வது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 4*100 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் நாடு சார்பாக 22 வயதுடைய நீச்சல் வீராங்கனை அனா கரோலினா வியேரா பங்கேற்றிருக்கிறார். பிரேசில் நாட்டில் மிகவும் கொண்டாடப்படும் விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர்.

அனா கரோலினா வியேரா

ஜூலை 27 -ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில் அதன் முந்தைய நாள் இரவு விதிமுறைகளை மீறி ஆடவர்களுக்கான 4*100 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே நீசால் போட்டியில் பங்கேற்றிருக்கும் தன் காதலரான கேப்ரியல் சாண்டோஸுடன் ஒலிம்பிக் நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறி இரவு நேர கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார் கரோலினா.

எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இருவரும் வெளியே சென்றதை அறிந்த பிரேசில் நிர்வாகம் அவர்களைக் கண்டித்திருக்கிறது. ஆனால் நீச்சல் வீராங்கனை கரோலினா அவர்களுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில்

அனா கரோலினா வியேரா, கேப்ரியல் சாண்டோஸ்

அவரை ஒலிம்பிக் போட்டியில் இருந்து பிரேசில் நிர்வகம் நீக்கி இருக்கிறது. ஆனால் கேப்ரியல் சாண்டோஸ் மன்னிப்புக் கோரியதை அடுத்து தண்டனையில் இருந்து அவர் தப்பித்திருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.