டிஆர்பியில் சொதப்பிய முக்கிய சீரியல்… அதிரடி காட்டிய சன் டிவி நிர்வாகம்…
சீரியல் என்றாலே சன் டிவி தான். அதிக அளவில் கிராமப்புறங்களில் பார்க்கப்படும் சீரியல்களில் அதிக இடம் கிடைத்திருப்பது சன் டிவிக்கு தான். ஆனால் சில வாரங்களாக சன் டிவியில் ஏற்பட்டிருக்கும் தொய்வு காரணமாக நிர்வாகம் தடாலடியாக முடிவு எடுத்து இருக்கிறது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் வரவேற்பை பொறுத்து அதற்கு வாராவாரம் டிஆர்பி ரேட்டிங் வழங்கப்படும். தினசரி சீரியல்களுக்கும், வார இறுதியில் வெளியாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் என டிஆர்பி தனித்தனியாக கொடுக்கப்படும்.
இதில் ரியாலிட்டி நிகழ்ச்சியை விட சீரியல்கள் தொலைக்காட்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இத்தனை வருடமாக முதல் இடத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு வந்த சன் டிவிக்கு கடந்த சில வருடமாக விஜய் டிவி பெரிய அளவில் போட்டியை கொடுத்து வருகிறது.
முதல் சில இடங்களில் விஜய் டிவியின் ஒன்று அல்லது இரண்டு சீரியல்கள் ஆவது பிடித்து விடுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் மீண்டும் சரியான டிராக்டை மாற்றிய சிறகடிக்க ஆசை கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது.
முதலிடமே பறிபோனது மட்டுமல்லாமல் அடுத்த சில இடங்களையும் விஜய் டிவி கைப்பற்றி இருக்கும் நிலையில் சன் டிவி நிர்வாகம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முன்னணியில் இருக்கும் சீரியல்கள் தங்களுடைய கதைக்களத்தை விறுவிறுப்பாக மாற்றி டிஆர்பியில் மீண்டும் முதலிடத்தை தக்க வைக்க வேண்டும் என ஆர்டர் பறந்து இருக்கிறது.
இதனால் கயல், சிங்க பெண்ணே, மருமகள் உள்ளிட்ட சீரியல்களில் அடுத்தடுத்த கட்டம் பரபரப்பாக மாற்றப்படும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. அதே வேளையில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி என இரண்டு சீரியல்கள் மட்டும் இல்லாமல் மற்ற சீரியல்களையும் முதல் 10 இடத்திற்குள் எடுத்து வர வேண்டும் என விஜய் டிவி தரப்பும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது .
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
