Paris Olympics 2024 Live Updates: இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்! - அசத்திய மனு பாக்கர் - சரப்ஜோத் இணை!

இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இணை மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் தென் கொரிய இணையை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.

தொடங்கியது இறுதிப்போட்டி!

10 மீ எர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி தொடங்கியது. இந்திய இணை மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் களத்தில் ஆடி வருகிறது.

இன்னும் சில நிமிடங்களில் இறுதிப்போட்டி!

10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இணை மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஆகியோர் தென் கொரிய இணையை இன்னும் சில நிமிடங்களில் எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

இன்றைய போட்டிகளின் அட்டவணை!

பதக்கப்பட்டியல் நிலவரம்!

மூன்றாம் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் 26-வது இடத்தில் இந்தியா!

Medal Tally

வரலாறு படைப்பாரா மனு பாக்கர்?

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் இன்றைய தினத்தில் இந்தியா ஒரு பதக்கத்தை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இணை 10 மீ ஏர் பிஸ்டலின் கலப்பு இரட்டையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று ஆடவிருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.