அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்த இந்திய ஹாக்கி அணி | பாரிஸ் ஒலிம்பிக்
பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஹாக்கி அணியின் இன்றைய ‘பி’ பிரிவு போட்டியில், 1-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்தது இந்திய அணி. இறுதியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்த நிலையில், இந்த சமன் சாத்தியமானது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் வீரர் லூகாஸ் மார்டினெஸ் கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அவரது கோலை இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுக்க தவறினார். இதனால், இந்தியாவுக்கு எதிராக 0-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

