பதக்க வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட இந்தியாவின் அர்ஜுன் பபுதா | பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவருக்கான இறுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா நூலிழையில் வெண்கலப் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். 208.4 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து வெளியேறினார்.

ஒலிம்பிக் தொடரின் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவருக்கான தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட அவர், 630.1 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில், தொடக்கத்திலிருந்து அரஜுன் சிறப்பாகவே செயல்ப்பட்டார். அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் சற்று தடுமாற்றம் கண்டதால் நூலிழையில் பதக்கத்துக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.