வெட்கத்தினை விட்டு கேட்டேன்… ஆனா? சீரியலில் இருந்து வெளியேறியதுக்கு காரணம் சொல்லும் வசந்த் வசீ…
சீரியல்களில் வளர்ந்து வரும் நடிகர் வசந்த் வசீ சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு முன் அவர் நாயகனாக நடித்த ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி சீரியலிலும் அவர் பாதியிலேயே விலக்கினார். ஆனால் அதன் காரணம் வெளியில் சொல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தொலைக்காட்சியில் நடித்த ஒரு ஊரில ஒரு ராஜகுமாரி சீரியலில் இருந்து தான் விலகியதன் காரணத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். முதலில் நான் திரைப்படங்களில் நடிக்க தான் ஆடிஷன் செய்து வந்தேன். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அது கைகூடாமலே சென்றது.
ஒரு படத்தில் கிட்டத்தட்ட எல்லா பேச்சுவார்த்தையையும் முடிந்து ஓகே ஆன நிலையில் மெச்சூடான ஆள் வேண்டும் எனக் கூறி டைரக்டர் என்னை மாற்றிவிட்டார். அந்த சமயத்தில் தான் எனக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி சீரியலில் நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது.
நானும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு அதில் நடித்து வந்தேன். நான் ஹீரோ என்றாலும் என்னுடைய புகைப்படங்கள் ஒரு போஸ்டரில் கூட இருக்காது. சீரியலுக்கு விளம்பரமாக என்னை பயன்படுத்தவே மாட்டார்கள். அது எனக்கு கஷ்டமாகவே இருந்தது. கேட்கவும் வெட்கமாக இருந்தது. இருந்தும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சீரியல் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டேன்.
ஆனால் அவர்கள் அதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இனிமேல் இங்கு இருப்பது மரியாதை இல்லை எனக் கூறி அந்த சீரியலில் இருந்து வெளியேறினேன். பலர் என்னிடம் அப்போது இது குறித்து காரணம் கேட்டார்கள். ஆனால் நான் ஐந்து வருடம் கழித்து இப்போதுதான் இதற்கு குறித்தே பேசியிருக்கிறேன்.
ஆனால் என்னுடைய இடத்தில் வந்த இரண்டாவது ஹீரோவிற்கு நல்ல பிரமோஷன் கொடுக்கப்பட்டது. போஸ்டர்களில் அவருடைய புகைப்படம் பயன்படுத்தப்பட்டது. அதுபோல விஜய் டிவியின் பாரதிதாசன் காலனி சீரியலிலும் நான் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அந்த சீரியலும் பாதியிலேயே முடிக்கப்பட்டு விட்டது. இதையெல்லாம் என்னுடைய பேட்லக்காக மட்டுமே கருதுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
