நான் வரேன்… ஆனா இந்த கண்டிஷன் நடக்கணும்… ஸ்டிரிக்டா சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்…
சீரியலில் மாற்றம் நடப்பது சாதாரண விஷயம் தான். பல கேரக்டர்கள் மாறும்போது ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள நேரம் எடுக்கும். ஆனால் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் செந்திலாக வெங்கட் எண்ட்ரியாகி இருப்பது பலருக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதில் நடித்த நடிகர்கள் அனைவருக்குமே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நான்கு ஜோடிகளில் முக்கிய இடம் பிடித்தது ஜீவா மற்றும் மீனாதான். ஏனெனில் அதற்கு முன் கதிர்முல்லை ஜோடி ஹிட் அடித்தனர்.
ஆனால் திடீரென விஜே சித்ரா இறந்துவிட அவர் இடத்திற்கு மாற்றாக வந்த எந்த நாயகியும் கதிராக நடித்த குமரனுக்கு சரியாக அமையவில்லை. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொண்ட வெங்கட் மற்றும் ஹேமா தங்களுக்கான வரவேற்பை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் இரண்டாவது சீசனிலும் முதலில் இவர்களே ஜோடியாக நடிக்க இருந்தது.
அந்த நேரத்தில் வெங்கட் கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு பதில் வசந்த் வசி இந்த சீரியலில் இடம் பெற்றார். ஆனால் அவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்தது. இதை அடுத்து அவர் சீரியலில் இருந்து வெளியேறினார்.
அந்த இடத்திற்கு நடிகர் வெங்கட்டை சீரியல் நிர்வாகம் நடிக்க அழைத்தது. ஆனால் தன்னுடைய கேரக்டர் வெகுளித்தனமாக இருப்பதை வெங்கட் விரும்பவில்லை. அமைதியாக போகும் கேரக்டரில் தன்னால் நடிக்க முடியாது. இந்த சீரியலில் இன்னொரு கதாபாத்திரமாக வரும் கதிர் போல் தானும் தந்தையை எதிர்க்கும் கேரக்டராக மட்டுமே நடிப்பேன் என சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம்.
இதற்கெல்லாம் டிவி நிர்வாகம் ஒப்புக்கொண்டதன் பின்னரே அவர் இந்த சீரியலில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதனால் தான் கடந்த இரண்டு வாரங்களாக வெங்கட்டிற்கு அதிக காட்சிகள் கொடுக்கப்படுகிறதாம். வரும் எபிசோட்களில் தந்தை மகனுக்கு முட்டிக் கொள்ளும் காட்சிகளும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
