ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: ரமிதா ஜிண்டால் முன்னேற்றம்
ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், ரமிதா ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச் சுற்றுப் போட்டியில் ரமிதா ஜிண்டால் சிறப்பாக செயல்பட்டு 5-வது இடம் பெற்றார். இதையடுத்து அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதேநேரத்தில், மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் வாலறிவன் 10-வது இடத்தை மட்டுமே பிடித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

