விஜய் டிவியை விட்டு எஸ்கேப்பானதுக்கு இதான் காரணமா? ரச்சிதா சொன்ன ஷாக் நியூஸ்
நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் பிரபல ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலர்ஸ் தமிழ் டிவிக்கு மாறிய காரணம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி. முதல் சீரியல் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இதைத் தொடர்ந்து விஜய் டிவியின் பிரபல சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையானார். ஒரு பக்கம் நடிகர்கள் மாறினாலும் அந்த சீரியல் இன் பல சீசன்களில் ரச்சிதா நடித்திருந்தார்.
தொடர்ச்சியாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இவரை பார்த்து உருக, அதுவே நிகழ்ச்சிக்கு பரபரப்பை கொடுத்தது. இதனால் ஃபைனல் வரை சென்று வெளியேறினார். அதில் கலந்து கொண்ட திருநங்கை சிவின் கணேசனுடன் இவருடைய நட்பு பாராட்டுகளை பெற்றது.
பல பிரபலங்கள் பிக் பாஸ் இருந்து வெளியேறியதும் விஜய் டிவியில் ஏதாவது ஒரு வகையில் இணைந்து இருப்பார்கள். ஆனால் ரச்சிதா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் நடித்து வருகிறார். இது பெரிய அளவில் விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து பேசிய ரச்சிதா, உங்களை வளர்த்து விட்ட தொலைக்காட்சியை விட்டு வேறு தொலைக்காட்சிக்கு செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர்.
மேனேஜர் ஒருவர் நீங்கள் வேறு தொலைக்காட்சிக்கு சென்றால் உங்கள் பெயர் கெட்டுவிடும் என்கிறார். பெயர் கெட்டுவிடும் அளவுக்கு நான் அங்கு போய் என்ன செய்யப் போகிறேன். பெரிய அளவில் சம்பளம் கிடைத்தால் வரவேற்பு அதிகமாகும் என்பதால் இன்னொரு சீரியலை ஒப்புக்கொண்டு அங்கு சென்றுள்ளேன். பிரபல தொலைக்காட்சிகளில் நடித்தால் சின்ன தொலைக்காட்சிகளில் யார் வளர்த்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
