Paris Olympics 2024 LIVE Updates: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி! 2 ம் நாள் போட்டிகளுக்கான லைவ் அப்டேட்ஸ்!

வரலாறு படைக்கும் இந்திய வீராங்கனைகள்!

ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 20 வருடங்களுக்குப் பிறகு இந்தியா சார்பில் இறுதிப்போட்டியில் ஆடும் வீராங்கனைகள் எனும் பெருமையை மனு பாக்கர் மற்றும் ரமிதா ஜிந்தால் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.

நூலிழையில் தோற்ற தமிழ்நாட்டு வீராங்கனை!

10 மீ ஏர் ரைபிள் பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற முடியும். அப்படியிருக்க தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10 வது இடம்பிடித்திருந்தார். 8 வது இடம்பிடித்த பிரான்ஸ் வீராங்கனைக்கும் இளவேனிலுக்கும் 0.7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம்.

இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை!

பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை ரமிதா சிறப்பாக ஆடி 631.5 புள்ளிகளோடு 5 ஆம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.

பி.வி.சிந்துவுக்கு முதல் வெற்றி!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தனது முதல் போட்டியில் ஆடிய பி.வி.சிந்து மாலத்தீவு வீராங்கனை ரசாக்கை 21-6, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி!

துடுப்புப்படகு

ஆண்களுக்கான துடுப்புப்படகு போட்டியில் ரீப்பேஜ் சுற்றில் இரண்டாம் இடம்பிடித்து இந்திய வீரர் பன்வர் பால்ராஜ் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.

இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறுவார்களா?

பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாளறிவன், ரமிதா ஆகியோர் இப்போது ஆடி வருகின்றனர். 43 வீராங்கனைகள் பங்குகொண்டிருக்கும் இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதிப்பெறுவார்கள். இப்போதைய நிலவரப்படி இளவேனில் முதல் இடத்திலும் ரமிதா 8 ஆம் இடத்திலும் இருக்கின்றனர்.

பதக்கம் வெல்லுமா வில்வித்தை அணி?

Paris Olympics 2024 LIVE Updates

தீபிகாகுமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் அடங்கிய இந்திய அணி பங்குபெறும் வில்வித்தை தொடரின் மகளிர் அணி காலிறுதிப் போட்டி இன்று மாலை 5.45 மணிக்கு தொடங்கும்.

பதக்கம் வெல்வாரா மனு பாக்கர்?

பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இன்று இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. தகுதிச்சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீராங்கனை மனு பாக்கர் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

மனு பாக்கர்

ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த பேட்மிண்ட வீராங்கனை பி.வி.சிந்து பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று தனது முதல் போட்டியில் மாலத்தீவு வீராங்கனை பாத்திமாத்தை எதிர்த்து ஆடிக்கொண்டிருக்கிறார்.

இரண்டாம் நாள் போட்டிகள் யார், யாருக்கு?

Paris Olympics 2024 LIVE Updates
Paris Olympics 2024 LIVE Updates
Paris Olympics 2024 LIVE Updates
Paris Olympics 2024 LIVE Updates
Paris Olympics 2024 LIVE Updates

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் இரண்டாம் நாளான இன்று இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.