மீண்டும் தரமான சம்பவம் செய்த விஜய் டிவி சிறகடிக்க ஆசை… மண்ணை கவ்விய சன் டிவி…

பல வாரங்களாக தொய்வை சந்தித்து வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த இரண்டு வாரமாக சரியான டிராக்கில் செல்வதால் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் மீண்டும் முதலிடத்தினை பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் எண்ணிக்கை எக்கசக்கமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் பலருக்கு சில சீரியல்கள் தான் பிடித்தமானதாக இருக்கும். சன் டிவி பெரும்பாலும் எல்லாருக்குமே பிடிச்ச தொலைக்காட்சி என்பதால் அதில் ஒளிபரப்பாகும் சீரியல் நல்ல ரீச்சுடன் இருக்கும்.

ஆனால் சமீபகாலமாக சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை சிதறடிக்கும் முடிவில் விஜய் டிவியும் இறங்கி இருக்கிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்துக்குள் விஜய் டிவி சீரியல்களும் இணைந்து இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 9.84 புள்ளிகளை பெற்று மீண்டும் முதலிடத்தினை தக்க வைத்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக சிறகடிக்க ஆசை முதலிடத்தில் இருக்கிறது. சன் டிவியின் கயல் சீரியல் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு இரண்டாம் இடத்தினை 8.81 புள்ளிகளை பெற்று பிடித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாம் இடத்துக்கு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் முன்னேறி இருக்கிறது. 8.67 புள்ளிகளை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து நான்காம் இடத்துக்கு சன் டிவியின் சிங்கப் பெண்ணே சீரியல் இறங்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல் 8.07 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் ஐந்தாம் இடத்தினை பிடித்துள்ளது. 8.05 புள்ளிகளை பெற்ற இந்த சீரியல் அறிமுகத்தில் இருந்தே சரியான வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.