எல்லாம் நேரம்…சும்மா இல்லாம வீடியோ போட்டு சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ’தனம்’...
சின்னத்திரை நடிகர்களும் தங்களுக்கு என ஒரு யூடியுப் சேனலை உருவாக்கி அதில் சீரியல் அப்டேட், தங்களுடைய வீடு முதல் தங்கள் செல்லும் இடம் வரை என அனைத்தையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருவது வாடிக்கையாகி இருக்கிறது.
பெரும்பாலான சின்னத்திரை பிரபலங்கள் தற்போது யூடியுப்பில் உள்ளனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சுஜிதா. சினிமாவில் கிடைத்த புகழை விட இவர் நடித்த சின்னத்திரை சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பெரிய அளவில் வரவேற்பை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.
அதில் மூத்த அண்ணி தனமாக நடித்து நிறைய ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தற்போது குக் வித் கோமாளியின் அட்டகாசமாக சமைத்து அசத்தி வரும் சுஜிதாவிற்கு தான் தற்போதைய ஒரு பிரச்சினை கிளம்பி இருக்கிறது. சமீபத்தில் சுசித்ரா தன்னுடைய யூடியுப் சேனலில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தங்களுடைய மருத்துவர் நண்பர் அனந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ள சுஜித்ரா அவர் வீட்டை தன்னுடைய ரசிகர்களுக்கு சுற்றி காட்டிக் கொண்டிருக்கிறார். வனப்பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் இந்த சொகுசு பங்களா கட்டப்பட்டிருக்கிறது. அதை சுற்றி காட்டியவர் அங்கிருந்த இரண்டு ஏர் ரைப்பில் வகை துப்பாக்கிகளையும் காட்டுகிறார்.
மேலும் அந்த துப்பாக்கிகளை எடுத்து டார்கெட்டை குறி வைப்பது போலவும் அந்த வீடியோக்களில் காட்சிகள் அமையப்பட்டுள்ளது. ஏர் ரைபிள் வகை துப்பாக்கி என்பதால் இதற்கு உரிமம் தேவையில்லை என்பதையும் தன்னுடைய வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தற்போது சமூக ஆர்வலர்கள் டார்கெட்டை குறி வைக்கும் துப்பாக்கி வனப்பகுதிக்குள் இருப்பது ஆபத்தான விஷயம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வன பகுதிக்குள் இருக்கும் விலங்குகள் கள்ளத்தனமாக சுடப்பட்டு இறப்பது வாடிக்கையாகி இருக்கும் நிலையில், சுஜி உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் பயிற்சி எடுப்பது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
