Pathirana: `கடவுள் கொடுத்த பரிசு- சி.எஸ்.கே மற்றும் தோனி குறித்து நெகிழ்ந்த பதிரனா
சிஎஸ்கே அணிக்காக விளையாடியது குறித்தும், தோனி குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் பதிரனா.
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. சூர்யகுமார் தலைமையிலான டி20 அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாரித் அசலங்கா தலைமையிலான இலங்கை டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளரானா மதிஷா பதிரனா இடம்பெற்றிருக்கிறார். 2022ம் ஆண்டில் அறிமுகமான முதல் ஐபிஎல் தொடரிலேயே சிஎஸ்கே அணிக்காக 19 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பதிரனா, “என் 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. சென்னை அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு. நான் சிஎஸ்கேக்காக விளையாடும் வரை பலருக்கு என்னை தெரியாது. ஓய்வறையில் தோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


