நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் கோட் போட இதான் காரணமா? சரிதான்ல!
டாக் ஷோவில் யாரைக் கேட்டாலுமே பிடித்த லிஸ்டில் முதலிடத்தை பிடிப்பது என்னவோ நீயா நானா நிகழ்ச்சி தான். பல வருடங்களை கடந்தும் இன்னமும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்தான். ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒரு கூட்டம் வந்து பேசும் போது அது சமூகத்தில் பேசு பொருளாகவும் மாறி வருகிறது.
பெண்களை கேட்கும் வரதட்சணை, ஆண் பெண் வேறுபாடு, மனைவி வேலை என ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளை கொண்டு வந்து ரசிகர்களை ஆர்வமாக நிகழ்ச்சியை பார்க்க வைப்பதில் நீயா நானா டீம் இன்னமும் சரியாக காய் நகர்த்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியை முதலிலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். கோபிநாத். அவருடைய பெயர் கூட நீயா நானா கோபிநாத் என அழைக்கும் அளவுக்கு புகழ் பெற்று கொடுத்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை பார்த்து பல தொலைக்காட்சி நிர்வாகம் அதேபோன்று நிகழ்ச்சியை வித்தியாசமான பெயர்களில் வைத்துள்ளனர்.
அதிலும் வெவ்வேறு பிரபல நடிகர்களும், தொகுப்பாளர்களும் நிகழ்ச்சியை தொகுத்து வந்தாலும் கோபிநாத்திற்கு கிடைத்த வரவேற்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இரு தரப்பிலும் தன்னுடைய ஆதரவை தெரிவிக்காமல் நடுநிலைமையாக முகம் சுளிக்காமல் தன்னுடைய கருத்தை சொல்வதில் கோபிநாத் என்றுமே கில்லாடிதான்.
இது மட்டுமல்லாமல் அவருடைய கோட் கூட பல இடங்களில் பேசுபொருளானது. இது குறித்து சமீபத்திய விருது விழாவில் கோபிநாத் கூறும்போது, நீயா நானா நிகழ்ச்சி தொடங்கிய காலத்தில் இரண்டு பேட்டரிகளை போட்டுக்கொண்டு நடக்க வேண்டும். ஆனால் வெறும் சட்டையுடன் அவ்வாறு நடந்தால் மனித வெடிகுண்டு நடப்பது போல இருக்கும். அதை மறைக்கவே கோட் போட தொடங்கினேன். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாகவே இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
