திடீரென போட்டோவை வெளியிட்ட கோபி… பாக்கியலட்சுமி சீரியல் முடிய போகிறதா?

சின்னத்திரையில் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி, முடிவை நோக்கி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதை அடுத்து இதில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கும் நடிகர் சதீஷ் இது குறித்து தகழல்கள் தெரிவித்திருக்கிறார்.

குடும்ப தலைவியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. முதலில் தமிழின் முக்கிய நடிகைகளான கஸ்தூரி, வித்யா ராமன் ஆகியோரிடம் பாக்யாவாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் மறுத்ததை அடுத்து கன்னட நடிகையான சுசித்ரா நடித்து வருகிறார்.

மேலும், கோபியாக சதீஷ், இனியாவாக நேகா, ஜெனியாக திவ்யா கணேஷ், ராதிகாவாக ரேஷ்மா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். 2020ம் ஆண்டு மார்ச்சில் ஒளிபரப்பாக இருந்த சீரியல் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது.

பின்னர் ஜூலையில் ஒளிபரப்பான சீரியல் தற்போது பல கட்டங்களை தாண்டி இன்று வரை 1168 எபிசோட்களை கடந்துள்ளது. இதில் வில்லனாக நடிக்கும் சதீஷுக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் உண்டு. கொடூரமான வில்லனாக இல்லாமல் காமெடி செய்து தன்னுடைய நடிப்பின் மூலம் வித்தியாசம் காட்டியே பிரபலம் அடைந்து இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தன்னுடைய பாக்கியலட்சுமி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் இவருடைய இரண்டாவது மனைவியான ராதிகா கேரக்டரில் நடிக்கும் ரேஷ்மா இல்லாததை எடுத்து ரசிகர்கள் பல கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே தன்னுடைய இரண்டாவது மனைவி மீது கோபத்தில் இருக்கும் சதீஷ் தன்னுடைய முதல் குடும்பத்துடன் இணைந்து விட்டாரா? இல்லை சீரியல் முடிய போகிறதா என பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில் சீரியல் தற்போது முடிய வாய்ப்பே இல்லை என சதீஷ் தன்னுடைய ரசிகர்களுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அட அப்பா எப்பத்தான் முடிப்பீங்க என ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.

கோபி வெளியிட்ட போஸ்ட்டைக் காண:� https://www.instagram.com/p/C9owSf6R80G/?hl=en

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.