நாயகி சீரியல் நடிகைக்கு கல்யாணமாகி 13 வருடமா? இவங்க கணவர் யார் தெரியுமா?
சன் டிவியில் பிரபல தொடராக வெளியானது நாயகி. ஆனால் இந்த சீரியல் பலநாள் செல்லவில்லை என்றாலும் இதில் நாயகியாக நடித்த வித்யா பிரதீப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடம் செய்து புகழ் பெற்றவர் நடிகை வித்யா பிரதீப். சினிமாவிற்கு முன்பே 200க்கும் அதிகமான பிரபல விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தடையற்க தக்க, கண்ணகி உள்ளிட்ட படங்களில் வித்யாவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.
இருந்தும், நடிகை வித்யாவை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியது என்னவோ நாயகி சீரியல் தான். இதில் முதலில் கமிட்டான விஜயலட்சுமி சில எபிசோடுகளிலேயே வெளியேற ஹீரோயினாக என்றி கொடுத்தவர் வித்யா பிரதீப். இருந்தும் சன் டிவியின் பிரதான சீரியல் போன்று பல வருடம் நீலாமல் குறுகிய எபிசோடுகளில் முடிந்த இந்த சீரியலில் வித்யா பிரதீப்பின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.
தற்போதும் சினிமா மற்றும் விளம்பரங்களில் கவனம் செலுத்தி வரும் வித்யா ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மருத்துவ படிப்பையும் அதற்கான ஆராய்ச்சியும் செய்து முடித்திருக்கிறார். தற்போது வித்யா பிரதீப் அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், சிங்கிளாக இருப்பார் எனப் பார்த்தால் வித்யாவிற்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என சமீபத்தில் அவருடைய இன்ஸ்டா பார்த்த ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஆச்சரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் வித்யா பிரதீப் இருந்தால் மட்டுமே சொந்த நாட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் தன்னுடைய பணிக்காக அமெரிக்கா திரும்பி சென்று விடுவார் எனவும் கூறப்படுகிறது.
�
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
