கணவர் வெளியிட்ட வீடியோவால் கடுப்பான செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா…
சின்னத்திரையில் சமீப காலமாக இணைந்து வேலை செய்யும் நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் இந்த லிஸ்டில் சில வருடங்கள் முன்னரே இணைந்தது ஷபானா மற்றும் ஆர்யன் ஜோடி.
ஜீ தமிழில் வெளியான செம்பருத்தி சீரியல் அறிமுகமானவர் ஷபானா. அந்த சீரியல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ச்சியாக சில வருடங்கள் ஒளிபரப்பான சீரியல் முடிவு பெற்றதை அடுத்து ஷபானா சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் எண்ட்ரி கொடுத்தார்.
ஆனால் அந்த சீரியல் அவருக்கு பெரிய அளவிலான வரவேற்பை கொடுக்கவில்லை. இவர் கணவர் நடிகர் ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் செழியன் ஆக நடித்து வந்தார். ஆனால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறி அவர் சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதை தொடர்ந்து மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய வேடம் ஏற்று நடித்து வந்தார். ஷபானாவும், ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஷபானா என்பதால் முதலில் இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டில் இருந்தும் சம்மதம் கிடைக்கவில்லை.
இருவரும் விடாப்பிடியாக இருந்து பெற்றவர்களின் சம்மதத்தை வாங்கி திருமணம் செய்து கொண்டாலும் இருவர் வீட்டிலும் இன்னும் பிரச்சினை நிலவிக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இத்தம்பதி விவாகரத்து வரை செல்லும் எனவும் பலர் கிசுகிசுத்தனர். இருந்தும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதை ஆரியன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தின் மூலம் மீண்டும் நிரூபணம் செய்திருக்கிறார்.
ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் காதலித்த காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதில் ஷபானா முகத்தில் மாஸ்க் உடன் ஹோட்டலில் ஆர்யனுடன் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது. இந்த பதிவின் கீழ் ஷபானா உடனே இந்த போஸ்ட்டை டெலீட் பண்ணுங்க என காமெடியாக கமெண்ட் செய்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
�
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
