வாய்ப்பு கிடைக்காமல் அந்த மாதிரி படங்களில் நடித்த எதிர்நீச்சல் நடிகர்… அடங்கம்மா!
தமிழ் சீரியல் வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான வரவேற்பை பெற்ற சீரியல் எதிர்நீச்சல் தான். பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் கூட இந்த சீரியலுக்கு மிகப்பெரிய அடிமையாகி இருந்தனர். ஆனால் இச்சீரியலில் முக்கிய கதாபாத்திரமான மாரிமுத்து இறந்த பின்னர் டிஆர்பி பெரிய அளவில் அடிவாங்கியது.
சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான சீரியல் எதிர்நீச்சல். அண்ணன் மற்றும் மூன்று தம்பிகளின் கதையாக அமைந்த இத்தொடரில் குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து நடித்திருந்தார். பொதுவாக சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
ஆனால் இந்த சீரியலில் வில்லன் கதாபாத்திரமான மாரிமுத்து பெரிய அளவிலான முக்கியத்துவம் பெற்றார். இதனாலே அவரின் இறப்பு சீரியலின் வளர்ச்சியை பெரிய அளவில் பாதித்தது. இந்த தொடரில் மாரிமுத்துவின் ஒரு தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் விபுராமன். இவருக்கும் இத்தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரமே கொடுக்கப்பட்டிருந்தது.
விபுராமன் தமிழ் சினிமாவில் சில கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அமெரிக்க மாப்பிள்ளை நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. சீரியல்களை பொருத்தவரை அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், கல்யாண பரிசு, அழகு, விதி, திகில் உள்ளிட்ட முக்கிய தொடரில் நடித்திருப்பார்.
விபுராமன் பல வருடங்களாக சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை தேடி கொண்டு இருப்பவர். அவருக்கு பெரிய அளவிலான திரைப்பட வாய்ப்புகள் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் விபராமன் தனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்பிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த வகையில், விபுராமன் 2011 ஆம் ஆண்டு வெளியான அநாகரிகம் என்னும் ஆபாச திரைப்படத்தில் நடித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் நல்லா நடிக்கும் நடிகரை போய் இப்படி ஒரு படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் என அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
