Paris Olympics 2024: 117, 72, 29, 14 - பாரிஸ் ஒலிம்பிக்ஸ் செல்லும் இந்திய அணி எண்களில்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இம்முறை இந்தியா 117 வீரர்களை பாரிஸ் அனுப்பிவைத்துள்ளது. விளையாட்டு உலகின் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அணி அனுப்பியிருக்கும் வீரர்கள் பற்றிய முக்கிய தகவல்கள் எண்களில்...
சென்ற முறை அரையிறுதி வரை சென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி இம்முறை தகுதிபெறாமல போனது இந்தப் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Indian Contingent for Paris Olympics 2024
Neeraj Chopra

அதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் 21 வீரர்களை அனுப்புகிறது. துப்பாக்கி சுடுதலில் அணைத்து பிரிவுகளிலும் பங்கேற்க இந்திய வீரர்கள் தகுதிபெறுவது இதுவே முதல்முறை. துப்பாக்கி சுடுதலில் அதிகபட்ச வீரர்களை இந்தியா அனுப்புவதும் இம்முறைதான். இவை அல்லாமல் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் 19 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து டேபிள் டென்னிஸில் எட்டு பேரும், பேட்மிண்டனில் ஏழு பேரும் உள்ளனர். மல்யுத்தம், வில்வித்தை மற்றும் குத்துச்சண்டையில் தலா ஆறு வீரர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து கோல்ஃப் (4), டென்னிஸ் (3), நீச்சல் (2) மற்றும் பாய்மரப் படகுப்போட்டி (2) உள்ளன. குதிரையேற்றம், ஜூடோ, படகுப் போட்டி மற்றும் பளு தூக்குதல் ஆகியவற்றில் தலா ஒரு வீரர் இடம்பெற்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பஞ்சாப் (19), தமிழ்நாடு (13), கர்நாடகா (7), உத்தரப் பிரதேசம் (7), கேரளா (6), மகாராஷ்டிரா (5), டெல்லி (4), ஆந்திரப் பிரதேசம் (4), தெலங்கானா (4), உத்தரகாண்ட் (4), மேற்கு வங்கம் (3), மத்தியப் பிரதேசம் (2), மணிப்பூர் (2), ஒடிசா (2), ராஜஸ்தான் (2), குஜராத் (2), சண்டிகர் (2), பீகார் (1), அசாம் (1), சிக்கிம் (1), ஜார்க்கண்ட் (1) மற்றும் கோவா (1) ஆகிய மாநிலங்கள் உள்ளனர்.

PV Sindhu
Dhinidhi Desinghu
Rohan Bopanna

இவருக்கு அடுத்த மூத்த வீரர் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் (42).

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.