மகனைப் பிரியும் ஹர்திக் பாண்ட்யா… நடாஷா வெளியிட்ட போட்டோ!


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வட இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர். இருவரும் தாங்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்போது மகன் அகஸ்தியாவோடு நடாஷா சொந்த நாடான செர்பியாவுக்கு திரும்பியுள்ளார். மகனுடன் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் பாண்ட்யாவை பிரிவது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.