23 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் கொலம்பியா | கோபா அமெரிக்கா தொடர்
சார்லோட்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் சார்லோட் நகரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோதின.
39-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கார்னரில் இருந்து அடித்த பந்தை ஜெபர்சன் லெர்மா துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 44-வது நிமிடத்தில் டேனியல் முனோஷ் உதவியுடன் பந்தை பெற்ற கொலம்பியாவின் ரிச்சர்டு ரியோஷ், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் அதை, உருகுவே கோல்கீப்பர் செர்ஜியோ ரோசெட் கோல் விழவிடாமல் தடுத்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


