Rohit Sharma: உங்களை நண்பராகவும் பயிற்சியாளராகவும் பெற்றது... - டிராவிட் பற்றி ரோஹித்
ராகுல் டிராவிட் குறித்து ரோஹித் சர்மா நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது. கடைசியாகக் கடந்த 2013-ல் இந்திய அணி ஐ.சி.சி தொடரை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தக் கோப்பையை வெல்லப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
இந்த உலகக்கோப்பை வெற்றியுடன் தனது பணிக்காலம் முடிந்ததனால், ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ராகுல் டிராவிட் குறித்து பலரும் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து வரும் நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவும் டிராவிட் குறித்துப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே லட்சக்கணக்கான மக்களைப் போல நானும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் அதில் உங்களுடன் இணைந்து பணியாற்றியதால் நான் ஒரு அதிர்ஷ்டசாலி. நீங்கள் பெற்ற பாராட்டுகளையும், படைத்த சாதனைகளையும் மறந்து ஒரு பயிற்சியாளராக மட்டுமே இணைந்து பணியாற்றி இருக்கிறீர்கள். அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எங்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்து இருக்கிறீர்கள்.
View this post on InstagramA post shared by Rohit Sharma (@rohitsharma45)
இந்த விளையாட்டின் மீதான உங்கள் அன்பு மிகப்பெரியது. நான் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என்னுடைய கிரிக்கெட் மனைவி என்று உங்களை என் மனைவி அழைப்பார். ராகுல் பாய் உங்களை என்னுடைய நம்பிக்கைக்குரியவர், எனது பயிற்சியாளர் மற்றும் எனது நண்பர் என்று அழைப்பதைப் பாக்கியம் என்று நினைக்கிறேன்" நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


