Ashwin : 15 வருசமா தோனி என்கிட்ட சொல்ற விஷயம் இதுதான்! - தோனி குறித்து அஷ்வின் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் முக்கிய வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து நெகிழ்ச்சியாக சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

Dhoni

அஷ்வின் பேசுகையில், "சென்னை அணிக்காக முதலில் நான் ஆடியபோது முதல் ஒரு வருடத்திற்கு என்னை அவருக்கு யாரென்றே தெரியாது. இப்படி ஒருவர் அணியில் இருக்கிறார் என்பது கூட அவருக்குத் தெரியாது. அடுத்து அவருடன் 15-17 ஆண்டுகள் ஒன்றாக ஆடிவிட்டேன். 2008-09 காலகட்டத்தில் அவர் எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். ஒரு ஐ.பி.எல் சீசனின் போது தோணிக்குக் கையில் அடிபட்டுவிடும் அதனால் சில போட்டிகளை அவர் தவறவிட்டுவிடுவார். அந்த சமயத்தில் ரெய்னா சென்னை அணியின் கேப்டனாக இருந்தார். ரெய்னா என்னை வேறுவிதமாகப் பயன்படுத்தினார். டெத் ஓவர்களிலெல்லாம் வீச வைத்தார். அது எனக்குச் சரியாக அமையவில்லை.

Ashwin
தோனி காயத்திலிருந்து மீண்டு வந்தார். என்னை மீண்டும் அழைத்து பவர்ப்ளேயில் வீச வைத்தார். நான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் விக்கெட்டையெல்லாம் பவர்ப்ளேக்குள் வீழ்த்தினேன். இந்திய அணிக்காக ஆடிய போதுமே தோனி என்னை பவர்ப்ளேயில் வீச வைத்தார்

அவர் என் மீது எப்போதுமே அதிக நம்பிக்கை வைத்திருந்தார். நீ புதிது புதிதாக வேரியேஷன்களை கண்டடைந்து வீசுவதுதான் உன்னுடைய பலம். அதைத் தொடர்ந்து வீசு, யாருக்காகவும் உன்னுடைய அந்தத் தன்மையை மட்டும் மாற்றிக் கொள்ளாதே. பல ஆண்டுகள் கழித்து அவரைப் பார்த்தபோதும் நீ உன்னுடைய வேரியேஷன்களை மெருகேற்றத் தொடர்ந்து வேலை செய் என்றே சொன்னார். வீரர்களின் கிரிக்கெட் ஆடும் திறனை மட்டுமே பார்க்காமல் அவர்களின் மனத்திடத்தையும் பார்த்தே தோனி வாய்ப்பு கொடுக்கிறார்

Ashwin

எனக்கு எப்படி பக்கபலமாக இருந்தாரோ அப்படியேதான் இப்போது சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டேவுக்கும் பக்கபலமாக இருக்கிறார் என நினைக்கிறேன்." என்று அஷ்வின் பேசியிருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.