ஸ்போர்ட்ஸ் விகடன் ஸ்டார்ட் அப்களுக்கும் பயனுள்ளதாக இருக்கு! - ஐபோன் வென்ற வாசகர் நெகிழ்ச்சி

ஸ்போர்ட்ஸ் விகடனும் சத்யா ஏஜென்சிஸூம் இணைந்து ஐ.பி.எல் நடைபெற்ற சமயத்தில் வாசகர்களுக்காக `சிக்சர் அடி ஐபோன் ரெடி! என்ற வினாடி வினா போட்டியை நடத்தியிருந்தோம். இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிக்கும் விழா சமீபத்தில் தி.நகர் சத்யா ஷோரூமில் சிறப்பாக நடந்திருந்தது.
Rohit

கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக நடந்த இந்தப் போட்டியில் தினசரி 4500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தியிருந்தனர். தினசரி பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், அடுத்த 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன. முதல் பரிசாக சத்யா சார்பில் ஐபோன் 13 வழங்கப்பட்டது. இந்த முதல் பரிசை சென்னையைச் சேர்ந்த ரோஹித் என்பவர் வென்றிருந்தார்.

அவர் பேசுகையில், "ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றுக்கு ஆலோசகராக இருக்கிறேன். அதனால் தொடர்ச்சியாக ஸ்போர்ட்ஸ் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள ஸ்போர்ட்ஸ் விகடன் ரொம்பவே பயன்பட்டது. விகடனின் சமூகவலைதள பக்கங்கள் மூலம் சிக்சர் அடி ஐபோன் ரெடி பற்றித் தெரிந்து கலந்துகொண்டேன். சில நாள்கள் கேள்விகள் ரொம்பவே கடினமாக இருந்தாலும் நேரமெடுத்து கடினமாக முயன்று பதிலளித்தேன்" என்றார்.

இரண்டாவது பரிசாக 32 இன்ச் LG டிவி வழங்கப்பட்டது. இந்தப் பரிசை வென்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமதாஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நிமிடத்தில் வர இயலவில்லை. மூன்றாவது பரிசாக சோனி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டது. இதை கன்னியாகுமரியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவர் வென்றிருந்தார்.

Abilash

அவர் பேசுகையில், கடந்த ஆண்டு நடந்த "சிக்சர் அடி ஐபோன் ரெடி போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். ஆனால், அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் கலந்துகொள்ள நேரமில்லை. இப்போது ஐடி-யில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சில கேள்விகள் கடினமாக இருந்தாலும் நண்பர்களின் உதவியோடு சரியாகப் பதிலளித்துவிட்டேன்" என்றார் மகிழ்ச்சியாக.

பரிசுகளை வழங்கி சிறப்பித்த சத்யா ஏஜென்சியின் இயக்குநர் ஜாக்சன் பேசுகையில்,

Jackson

"இளைஞர்கள் மத்தியில் அதிகமாகச் சென்று சேர ஸ்போர்ட்ஸ் விகடன் மாதிரியான தளங்கள்தான் பெரியளவில் பலனளிக்கும் என நம்புகிறோம். அதனால்தான் விகடனுடன் தொடர்ந்து பயணித்து வருகிறோம். இளைஞர்களைக் கவரும் வகையில் மொபைல்களுக்காக பல பிரத்யேக ஆஃபர்களை வழங்கி வருகிறோம்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.