டி20-ல் இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்

ஹராரே: ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்தியகிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஹராரே நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அடுத்த தலைமுறை வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் சர்மா, அசாமை சேர்ந்த ரியான் பராக் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கக்கூடும். இவர்கள் இருவருமே ஐபிஎல் டி 20 தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சை வெளிப்படுத்தியிருந்தனர். டி 20 கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இருக்கும் இந்திய அணி அடுத்த உலகக் கோப்பை தொடரை 2026-ம் ஆண்டு சொந்த மண்ணில் விளையாட உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.