கோபா அமெரிக்கா தொடர் | பெனால்டி ஷூட் அவுட்டை மிஸ் செய்த மெஸ்ஸி: அரையிறுதியில் அர்ஜென்டினா

ஹூஸ்டன்: நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா. காலிறுதியில் ஈக்வேடாரை அந்த அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினஸ் அற்புதமாக இரண்டு ஷாட்களை பெனால்டி ஷூட் அவுட்டில் தடுத்திருந்தார்.

இந்தப் போட்டி அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் நடைபெற்றது. முதல் பாதியில் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினஸ் முதல் கோலை பதிவு செய்தார். பந்து அர்ஜென்டினா அணியின் கட்டுப்பாட்டில் இருந்த சூழலில் இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் நிலை மாறியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.