Euro 2024: நான் இனி வெல்வதற்கு என்ன இருக்கிறது?” - கடைசி யூரோ கோப்பை குறித்து ரொனால்டோ!
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாகப் பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
இந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் ஸ்லோவேனியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது கிறிஸ்டியானோ ரொனால்டாவின் போர்ச்சுகல் அணி.
இதனைத்தொடர்ந்து கால் இறுதிச் சுற்றில் போர்ச்சுகல் அணி வரும் 6-ம் தேதி பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில் இதுதான் தனது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் போட்டி என்று போர்ச்சுகல் அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "இதுதான் எனது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் போட்டி. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்காக நான் கவலைப்படவில்லை. கால்பந்து எனக்கு அளித்த உற்சாகம், ரசிகர்களைப் பார்க்கும்போது வரும் சந்தோஷம், இதெல்லாம் நெகிழ்ச்சியாக உள்ளது. இது கால்பந்து உலகை விட்டுச் செல்வது பற்றியது அல்ல. இனி நான் செய்வதற்கோ, வெற்றி பெறுவதற்கோ என்ன உள்ளது?” என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


