பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணித் தேர்வு எப்படி? - ஓர் அலசல்
ஜூலை மாதம் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஆர்வத்தைத் தூண்டும் இந்திய ஹாக்கி அணித் தேர்வு இந்த முறை தேறுமா அல்லது கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தையும் கடந்து செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன்னால் டீம் செலக்‌ஷன் குறித்து பார்ப்போம். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வருமாறு:
- கோல் கீப்பர்: ஸ்ரீஜேஷ் பராத்து ரவீந்திரன்
- தடுப்பு வீரர்கள்: ஜார்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சுமித், சஞ்சய்
- நடுக்கள வீரர்கள்: ராஜ்குமார் பால், ஷாம்சர் சிங், மன்ப்ரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத்
- முன்கள வீரர்கள்: அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங்.
- மாற்று வீரர்கள்: நீலகண்ட சர்மா, ஜுக்ராஜ் சிங், கிருஷண் பகதூர் பதக்.
புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதை விட அனுபவ வீரர்களுக்கும் இதுவரை ஆடி நிரூபித்த வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒரு விதத்தில் கன்சர்வேட்டிவ் ஆக தலைமைப் பயிற்சியாளர் ஃபுல்டன் தேர்வு செய்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


