Virat Kohli: நீ இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை! - அனுஷ்கா ஷர்மா குறித்து விராட்டின் க்யூட் போஸ்ட்
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு நாடெங்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணமிருக்கின்றன.
கடைசியாகக் கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை பும்ராவும் வென்றுள்ளனர்.
பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் இந்த வெற்றியைக் கொண்டாடி, இந்திய அணி வீரர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட்டின் மனைவி அனுஷ்கா ஷர்மா, "இந்த வீரனை நான் மிகவும் நேசிக்கிறேன். நாம் இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடுவோம்" என்று மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், விராட் - அனுஷ்காவின் குழந்தை வாமிகா கண்ணீரில் இருக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களை அன்புடன் அணைத்துக் கொள்வதாகப் பதிவிட்டிருந்தார்.
View this post on InstagramA post shared by Virat Kohli (@virat.kohli)
இதையடுத்து தற்போது விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா குறித்து, "நீ இல்லாமல் இது எதுவுமே சாத்தியமில்லை. இன்று நான் அன்பாகவும், பணிவுடனும் இருப்பதற்குக் காரணமாக இருப்பது நீதான். எது எப்படி என்பதை வெளிப்படையாகவே நீ சொல்லிவிடுவாய். இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல, உன்னுடையதும்தான். நீ நீயாகவே என்றும் இருப்பதை நான் நேசிக்கிறேன். நன்றி அனுஷ்மா ஷர்மா" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


