சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா: மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம்

சென்னை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 4 நாட்கள் கொண்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.