சர்வதேச T20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இப் போட்டியில் ரோஹித் 41 பந்தில் 7 பவுண்டரி, 8 சிக்சர் உட்பட 92 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது இத்தகவல் இணையத்தில் பரலாக பேசப்பட்டு வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

The post சர்வதேச T20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித்.. என்ன Record வாங்க பாக்கலாம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.