WI vs SA 2024: கடைசி ஓவர் திரில்லர்.. 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா!!
T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் செஸ் 52 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் போட்டியில் மழை குறிப்பிட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. இந்த அணியில் விளையாடிய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஆனாலும் கடைசி ஓவரில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற 5 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜான்சன் சிக்சர் அடிக்க அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
Enewz Tamil WhatsApp Channel
The post WI vs SA 2024: கடைசி ஓவர் திரில்லர்.. 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


