T20WC2024: அமெரிக்கா சொதப்பல் ஆட்டம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!!
T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கௌஸ் சார்லஸ் 29 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் 4 பவுண்டரி, 8 சிக்ஸர் உட்பட 82* ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 130 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
The post T20WC2024: அமெரிக்கா சொதப்பல் ஆட்டம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


