IND vs AFG: இந்த வெற்றியில் கடின உழைப்பு இருக்கிறது! - நெகிழ்ந்த ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ்

ஆட்டநாயகன் விருது வென்ற சூர்யகுமார் யாதவ் அணியின் வெற்றி குறித்துப் பேசியிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்டியா 32, விராட் கோலி 24 ரன்களை அடித்திருந்தனர்.

indian players

இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அதன் பிறகு பேசிய அவர், "இந்த வெற்றியில் நிறைய கடின உழைப்பு இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இந்தத் தொடரில் இந்திய அணி விளையாடிய போட்டிகளில் முதல் முறையாக பேட்ஸ்மேனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

கிரிக்கெட்டில் நீங்கள் உங்கள் கேம் பிளானை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பின் அதற்கேற்ப விளையாட வேண்டும். ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வந்த பொழுது நான் என்ன சொன்னேன் என்று எனக்கு நினைவில் இருக்கிறது.

சூர்யகுமார் யாதவ்

நாம் தொடர்ந்து இதே வேகத்தில் பெடலை அழுத்தி அதிரடியாக விளையாடுவோம். இறுதியில் 180 ரன்கள் வந்தால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று கூறினேன். கடைசியில் நாங்கள் அதையே செய்து காட்டி இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியாகக் கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.