முடிவுக்கு வரும் விராட் & ரோஹித் டி20 பயணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த 2ம் தேதி முதல் T20 உலகப் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 போட்டிகள் தொடங்க உள்ளன. இத்தொடருக்கு அடுத்தபடியாக இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. எனவே இவ்விரு அணிகள் மோதும் முதல் T20 போட்டியானது வரும் (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனால், சீனியர் வீரர்கள் இனி டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என பரவலான தகவல் வெளிவரத் தொடங்கி உள்ளது. இது குறித்து, ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருப்பதால், முன்னணி வீரர்களுக்கான பணிச்சுமை குறைக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தான் டி20 தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Enewz Tamil டெலிக்ராம்
பார்சலுக்குள் பாம்பு.. ஆன்லைனில் ஆர்டர் செய்த தம்பதிக்கு அதிர்ச்சி.. முழு விவரம் உள்ளே!!
The post முடிவுக்கு வரும் விராட் & ரோஹித் டி20 பயணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


