ICC தரவரிசை பட்டியல்.. முதலிடத்தை தக்க வைத்த சூர்யகுமார் யாதவ்.. விராட்,ரோகித் நிலை என்ன??  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வாரம் தோறும் அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது T20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை பார்க்கும் பொழுது, 837 புள்ளிகளுடன் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 வது இடத்தை தக்க வைத்துள்ளார். இதை அடுத்து ஆல்ரவுண்டர்களுக்கான புள்ளிப்பட்டியலில் 231 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு ஆஸ்திரேலியா வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் முன்னேறினார். இதில் 192 புள்ளிகளுடன் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 6வது இடத்தில் உள்ளார். இதே போல, ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில், பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் (801), விராட் கோலி (768) மற்றும் ரோஹித் சர்மா (746) புள்ளிகளுடன் 2, 3 மற்றும் 4 வது இடத்தை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

The post ICC தரவரிசை பட்டியல்.. முதலிடத்தை தக்க வைத்த சூர்யகுமார் யாதவ்.. விராட்,ரோகித் நிலை என்ன??   appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.