மூக்கில் பலத்த காயம்: மாஸ்க் அணிந்து விளையாட எம்பாப்பே திட்டம் | Euro Cup
முனிச்: ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு யூரோ கோப்பை தொடரின் ‘குரூப் - டி’ பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் எதிரணி வீரருடன் பலமாக மோதியதில் பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாப்பேவுக்கு மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டது.
மருத்துவ உதவி காரணமாக அவர் களத்தை விட்டு வெளியேறி இருந்தார். பின்னர் மீண்டும் களம் கண்டார். இருந்தும் ஆட்டத்தை தொடர முடியாமல் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அதன் பிறகு அவர் வெளியேறினார். Own கோல் முறையில் பிரான்ஸ் இதில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


