கேன் வில்லியம்சனின் தப்புக் கணக்குகள்: நியூஸி. தோல்விக்கு காரணமான 2 ஓவர்கள்!
மேற்கு இந்திய தீவுகளின் தரவ்பாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை குரூப் சி போட்டியில் நியூஸிலாந்து அணி மேற்கு இந்திய தீவுகளிடம் தோற்று சூப்பர் 8 தகுதியை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது. தோல்விக்கு பிரதான காரணங்களாக கேன் வில்லியம்சன் கேப்டன்சியில் போட்ட தப்புக் கணக்குகளைச் சொல்லலாம்.
கடும் கனமழைக்குப் பிறகான ஒருமாதிரியான பிட்சில் டாஸ் வென்று பேட் செய்வதை விடுத்து மேற்கு இந்திய தீவுகளை முதலில் பேட் செய்ய அழைத்தது தவறாகிப் போனது. வெஸ்ட் இண்டீஸ் அணி நியூஸிலாந்தின் துல்லியமான பவுலிங்குக்கு எந்த ஒரு அடிப்படைப் புரிதலும் கால் நகர்த்தலும், தடுப்பாட்ட உத்தியும் இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக பேட் செய்து 7 ஓவர்களில் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது. ஆனால் நின்று நிதானித்து பிறகு மட்டையைச் சுழற்றிய ருதர்போர்டு அபாரமான அரைசதத்தை எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் 37 ரன்களை விளாசினார். இதனால் இந்த கடினமானப் பிட்சில் நியூஸிலாந்து 150 ரன்களை இலக்காகப் பெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


