நடுவரின் தவறான தீர்ப்பால் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பறிகொடுத்தது இந்திய கால்பந்து அணி: கத்தாரிடம் தோல்வி
தோகா: 2026-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய அளவிலான தகுதி சுற்றின் 2-வது கட்ட போட்டியில் 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த அணிகள்9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது கட்ட தகுதி சுற்று தொடருக்கு முன்னேறும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


