IND vs IRE: பிட்ச் ஆடுவதற்குக் கடினமாகத்தான் இருந்தது - நேற்றைய போட்டி குறித்து ரோஹித் சர்மா
டி 20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நேற்று அயர்லாந்திற்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இந்தியக் கேப்டன் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ரோஹித் சர்மா. போட்டிக்குப் பிறகு அணியின் வெற்றி குறித்துப் பேசிய ரோஹித் சர்மா, "இந்த பிட்ச்சில் நாங்கள் என்ன எதிர்பார்ப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது உருவாக்கப்பட்டு ஐந்து மாதமே ஆன பிட்ச்.
இது பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தது. நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்த போதும் பிட்ச் அதே போலத்தான் இருந்தது. எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.
எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுபவர்கள் என்பதால் அதைச் சரியாக செய்தார்கள்.அர்ஷ்தீப் சிங் மட்டும்தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியதில்லை. ஆனால், அவரது இரண்டு விக்கெட்டுகள்தான் இந்தப் போட்டியின் போக்கை எங்களுக்குச் சாதகமாக அமைத்துக் கொடுத்தது.
.jpeg)
அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடத் தயாராக வேண்டும். அந்த போட்டிக்கு 11 வீரர்களும் சிறப்பாக பங்களிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


