டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நேபாளத்தை எளிதாக வென்றது நெதர்லாந்து

டல்லாஸ்: ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நேபாளம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.

அமெரிக்காவின் டல்லாஸ்நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 19.2ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும்இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் பவுடெல் 37 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்தார். கரண் 17, குல்சன்ஹா 14 ரன்கள் எடுத்தனர். மற்றஎந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. நெதர்லாந்து அணி சார்பில் டிம்பிரிங்கில், லோகன் வான் பீக் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் பால் வான் மீகெரென், பாஸ் டி லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.