Sanju Samson: சரியான முறையில் தயாராகி வந்திருக்கிறேன்! - டி20 உலகக்கோப்பை குறித்து சஞ்சு சாம்சன்
இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் சஞ்சு சாம்சன்.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சாம்சன் செயல்பட்டிருந்தார். 15 இன்னிங்ஸில் விளையாடிய அவர் 531 ரன்கள் குவித்திருந்தார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய சஞ்சு சாம்சன். “என் கிரிக்கெட் வாழ்க்கையிலேயே சிறந்த முறையில் தயாராகி அனுபவப்பட்டு வந்திருப்பது இந்த உலகக் கோப்பை தொடருக்காகத்தான். பல வெற்றி, தோல்விகளுக்குப் பிறகு நான் இந்தக் கட்டத்திற்கு வந்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையும் கிரிக்கெட்டும் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.
ஐபிஎல் தொடர் ஒன்றே எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுத்தது. ஐபிஎல் விளையாடும் போது தேர்வுக் குழுவினர் என்னைக் கவனிப்பார்கள் என்று எனக்கு தெரியும். அந்த வகையில் ஐபிஎல் தொடர் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சில சமயம் அணியில் இடம் கிடைக்கும், சில சமயம் கிடைக்காமலும் போகும்.

அதனால் இந்திய அணியில் இடம் பிடிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அணி நிர்வாகத்திற்கு என்ன தேவையோ, அணியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த காம்பினேஷனில் இருக்க வேண்டுமோ, அதைப் பொறுத்துதான் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும். என்னை பொறுத்தவரை நான் சரியான முறையில் தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


